Dec 9, 2025 - 05:05 PM -
0
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டியும், இறந்த உறவுகளின் ஆன்மா சாந்தியடைய இறை ஆசி வேண்டியும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த யாக பூஜை வழிபாடு இன்று (09) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் கொழும்பு பழைய கதிரேசன் ஆலயத்தில் (வஜிரா ஆலயம்) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தசாசன அமைச்சின் பிரத்தியேக செயலாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்னன் உட்பட அரச அதிகாரிகள், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
--

