செய்திகள்
மீகஹகிவுலவில் மண்சரிவு: உயிரிழப்பு இல்லை

Dec 10, 2025 - 08:57 AM -

0

மீகஹகிவுலவில் மண்சரிவு: உயிரிழப்பு இல்லை

மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

மண்சரிவு ஏற்பட்ட போதிலும், அந்த இடத்தில் இருந்து எந்தவிதமான உயிர்ச்சேதங்களும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05