Dec 10, 2025 - 11:48 AM -
0
நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வாழ்க்கைமுறைத் தீர்வுகளை வழங்குவதில் தேசத்தில் நம்பிக்கைமிக்க நாமமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி, TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மூலமான போக்குவரத்துத் துறையில் தான் காலடியெடுத்து வைப்பதை அறிவித்துள்ளது. இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் உலகின் மிகப் பாரிய நிறுவனங்களில் ஒன்றாகக் திகழ்ந்து வரும் நிலைபேற்றியல் சார்ந்த இலெக்ட்ரிக் மோட்டார் வாகன நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளை சிங்கர் தற்போது விஸ்தரித்து வருவதையும், சிக்கனமான, சூழல்நேய போக்குவரத்து தீர்வுகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிப்பதில் அதன் இலக்கினையும் TAILG உடனான இக்கூட்டுமுயற்சி பிரதிபலிக்கின்றது.
சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சியின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. மகேஷ் விஜேவர்த்தன அவர்கள் இந்த அறிமுகம் குறித்து கருத்து வெளியிடுகையில், “எதிர்காலப் போக்குவரத்து வழிமுறைகள் பயன்மிக்கவையாகவும், சிக்கனமானவையாகவும், மற்றும் சூழல்நேயம் கொண்டவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் சிங்கர் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளது. TAILG உடனான எமது கூட்டாண்மை இலங்கையில் போக்குவரத்துத் துறையில் நிலைபேற்றியல் கொண்ட புத்தாக்கத்தை வளர்ப்பதில் மிக முக்கியமானதொரு படியாகக் காணப்படுகின்றது.”
TAILG நிறுவனத்தின் ஆசியாவுக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திரு. லின் பெங் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நிலைபேற்றியல் மிக்க மற்றும் தூய்மையான உலகு குறித்த எமது குறிக்கோளைப் பகிர்ந்துகொண்டுள்ள ஒரு நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்காவுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். இலெக்ட்ரிக் வாகனங்கள் மூலமான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் சிங்கரின் உள்ளூர் பலம் மற்றும் TAILG ன் உலகளாவிய நிபுணத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கின்ற இக்கூட்டாண்மை, வெறுமனே வணிகம் என்பதற்கும் அப்பாற்பட்டது. எதிர்வரும் தலைமுறைகளுக்கு தூய்மையான எதிர்காலத்திற்கு வித்திடுவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பாக இது காணப்படுகின்றது.”
2004ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட TAILG, 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான ஏற்றுமதியுடன் சர்வதேச உற்பத்தியாளராக வளர்ச்சி கண்டுள்ளது. பிரயாணிக்கக்கூடிய தூரம், பெறுபேற்றுத்திறன், மற்றும் தராதரம் கொண்ட வடிவமைப்புக்களுக்காக இந்நிறுவனம் உற்பத்தி செய்கின்ற இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் சிறந்த அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது. சிங்கரின் தேசிய சில்லறை வர்த்தக பலம் மற்றும் சேவை உட்கட்டமைப்பு மற்றும் TAILGயின் தொழில்நுட்பவியல் நிபுணத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இக்கூட்டாண்மையின் கீழ் சர்வதேச மட்டத்தில் பெறுபேற்றுத்திறன் தராதர மட்டங்களுடன், நம்பிக்கை மிக்க விற்பனைக்கு பிந்தைய சேவை வலையமைப்பின் மூலமான உள்ளூர் ஆதரவையும் கொண்ட இலெக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய TAILG மோட்டார் சைக்கிள் வரிசையானது உள்ளூர் பாவனையாளர்களின் நடைமுறை ரீதியான மற்றும் பெறுபேற்றுத்திறன் தேவைப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட F71, F55, மற்றும் F72 ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 1500W வலு கொண்ட மோட்டார் மற்றும் 72V 38Ah பேட்டரி ஆகியவற்றைக் கொண்ட TAILG F71, மணிக்கு 55 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்துடன், 100 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க உதவுகின்றது. 2000W வலு கொண்ட மோட்டார் மற்றும் 72V 38Ah பேட்டரி ஆகியவற்றைக் கொண்ட F55, மணிக்கு 65 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்துடன், 100 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க உதவுகின்றது. 3000W வலு கொண்ட மோட்டார் மற்றும் 96V 52Ah பேட்டரி ஆகியவற்றைக் கொண்ட பிரதான தயாரிப்பு வடிவமான F72, மணிக்கு 60 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்துடன், 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க உதவுகின்றது. இத்தயாரிப்பு வடிவங்கள் அனைத்தும் 12 அங்குல டயர்கள், முன்புற மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகள், மற்றும் நவீன பேட்டரி முகாமைத்துவக் கட்டமைப்பு ஆகிய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளதுடன், சிவப்பு, சாம்பல், பச்சை, மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் வெளிவருகின்றன.
“நீண்ட தூரத்திற்கு இயங்கும் இலெக்ட்ரிக் வாகனங்கள்” (Long Range Electric Vehicles) என்ற அதன் சர்வதேச மகுட வாக்கியத்துடன் ஒன்றியதாக, எரிசக்தி வினைதிறனை அதியுச்சப்படுத்தி, பராமரிப்பு தேவைப்பாடுகளை மிகவும் குறைப்பதிலும் TAILG கவனம் செலுத்தியுள்ளது. பூஜ்ஜிய உமிழ்வுடனான போக்குவரத்திற்கு வழிவகுக்கின்ற, இந்த இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் பிரயாணச் செலவை கணிசமான அளவில் குறைப்பதுடன், நகரப்புற பிரயாணிகள், விநியோக சேவை ஓட்டுனர்கள், மற்றும் ஏனைய அன்றாட பாவனையாளர்களுக்கு மிகவும் உகந்தவையாகக் காணப்படுகின்றன.
இந்த அறிமுகத்தைக் குறிக்கும் வகையில், கவர்ச்சியான நிதி வசதித் தெரிவுகள், இரண்டு இலவச பராமரிப்புச் சேவைகள் மற்றும் பல சலுகைகளைக் கொண்ட அறிமுகத் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க சிங்கர் முன்வந்துள்ளது. இலங்கை மக்கள் மத்தியில் TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான வசதியை மேம்படுத்தி, செலவைக் கட்டுப்படுத்துவதற்கு இது உதவுகின்றது.
சிங்கர் தற்போது கொண்டுள்ள வாடிக்கையாளர் தளம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்புச் சேவை ஆற்றல் ஆகியவற்றின் அனுகூலத்துடன், இலெக்ட்ரிக் வாகனங்களின் பாவனையாளர்களுக்கு நீண்ட கால தொழிற்பாட்டு ஆதரவு, சௌகரியமான பராமரிப்புச் சேவை, மற்றும் தயாரிப்பு குறித்த நம்பிக்கைக்கு சிங்கர் மற்றும் TAILG இடையிலான ஒத்துழைப்பு உறுதியளிக்கின்றது. புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் அளிக்கும் சிந்தனை ஆகிய பாரம்பரியங்களை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து, இந்த அறிமுகத்தின் மூலமாக தான் வீடுகளுக்கு வழங்கி வந்துள்ள நம்பிக்கைமிக்க சேவையை தற்போது வீதிகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியை சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள சிங்கர் காட்சியறைகளில் TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் தற்போது கிடைக்கப்பெறுகின்றன. மேலதிக தகவல் விபரங்களுக்கு அல்லது முழுமையான உற்பத்தி வரிசை குறித்து ஆராய விரும்பும் வாடிக்கையாளர்கள் www.singer.lk என்ற இணையத்தளத்திற்கு செல்வதனூடாக அவற்றை அறிந்து கொள்ள முடியும்.

