வணிகம்
செலான் வங்கியின் ATMகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் நாணயக் கலவையில் பணத்தை எளிதாகப் பெறும் வசதியை வழங்குகின்றன

Dec 10, 2025 - 11:51 AM -

0

செலான் வங்கியின் ATMகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் நாணயக் கலவையில் பணத்தை எளிதாகப் பெறும் வசதியை வழங்குகின்றன

செலான் வங்கி, தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATMகள்), பண வைப்பு இயந்திரங்கள் (CDMகள்) மற்றும் காசோலை வைப்பு kioskகள் (CDKகள்) ஆகியவற்றை கொண்ட தனது பரந்த வலையமைப்பு ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட வங்கிச் சேவையில் கட்டுப்பாட்டையும் சௌகரியத்தையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இச் சேவைகளில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நாணயப் பெறுமதிகளை தேர்ந்தெடுக்கும் திறனும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

2023ஆம் ஆண்டு செலான் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட இச் சிறப்பம்சம், வாடிக்கையாளர்கள் 5000, 1000, 500 மற்றும் 100 ரூபாய் நாணய கலவையிலிருந்து தமக்கு ஏற்றவாறு பணத்தைப் பெற அனுமதிக்கின்றது. இலங்கையில் இவ்வாறான மேம்பட்ட ATM வலையமைப்பை கொண்ட இரண்டு வங்கிகளில், செலான் வங்கியும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் உடனடித் தேவைகளை உணர்ந்து அன்புடன் அரவணைக்கும் வங்கி, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நாணயப் பெறுமதிகளை நேரடியாக ATMகளில் இருந்து தெரிந்தெடுக்கும் திறனை அறிமுகப்படுத்தியது. 

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கித் தீர்வாக இந்த அம்சம், ATMகளில் இருந்து பணம் எடுப்பதில் ஏற்படும் தொந்தரவை நீக்குகிறது. இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்கள் விருப்பப்படி பணம் எடுக்கும் வசதியை வழங்குவதுடன் வங்கி கருமபீடங்களில் பெரிய பணத்தாள்களை மாற்றிக் கொள்வதில் நேரத்தை செலவிடுவதை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நிகழ்நேர மதிப்பை வழங்கும் இந்த அம்சம், சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்குவதற்காக புதுமைகளை புகுத்துவதில் செலான் வங்கியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

இத் தெரிவை நேரடியாக ATMகள் ஊடாக வழங்குவதன் மூலம் செலான் வங்கி, நேர தாமதங்களை திறம்பட நிவர்த்தி செய்து அசௌகரியங்களை நீக்குகின்றது. கடையில் பொருட்களை கொள்வனவு செய்வது முதல் வாகன சவாரிகள் வரை இன்னும் பல தேவைகளிற்கு செலான் வங்கியின் மாறுபட்ட தாள் கலவைகள் வாடிக்கையாளர்களின் பல்வேறு தனிப்பட்ட மற்றும் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதுணையாக நிற்கின்றன. இச் சேவை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மேலதிக பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை சேர்க்கிறது. அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில், செலான் வங்கியின் இப் புதிய சேவை, வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம் மற்றும் பாதுகாப்புடன் கூடிய நடைமுறைக்கு உகந்த நம்பகமான தீர்வாக உள்ளது. 

நாடு முழுவதும் முக்கிய இடங்களில் செலான் வங்கியின் ATM இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் விரைவாக, பாதுகாப்பான மற்றும் தொடுகையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக அணுக உதவுவதுடன் அன்றாட வங்கிச் சேவையின் எதிர்காலத்தை இது மாற்றியமைக்கின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05