சினிமா
ரக்ஷனின் மொய் விருந்து படத்தின் முதல் பார்வை வௌியீடு

Dec 10, 2025 - 03:16 PM -

0

ரக்ஷனின் மொய் விருந்து படத்தின் முதல் பார்வை வௌியீடு

அறிமுக இயக்குநர் சிஆர் மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான பேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள படம் 'மொய் விருந்து'. 

தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையக் கரு. 

‛வீடு' புகழ் அர்ச்சனா இப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ரக்ஷன் மற்றும் ஆயிஷா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் மற்றும் கொட்டச்சி உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். 

இமான் இசையமைக்கிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. 

இயக்குனர் கூறுகையில், ‛‛நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப் பணத்தை திருப்பி செய்ய வேண்டும். 

அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும் அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது, இதை மையமாக வைத்து உருவாக்கியது தான் இந்தப்படம், அதனால் தான் இந்தப்படத்திற்கு 'மொய் விருந்து' என்று தலைப்பு வைத்துள்ளோம், இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான பேமிலி டிராமா என்றார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. 

விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05