Dec 10, 2025 - 03:34 PM -
0
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்படும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்காகக் காணப்படும் அறிவியல் ரீதியிலான முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படும் நிலையில், இவ்வனர்த்தமானது அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளதால், நிலைமையைப் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொள்ளாமல் இத்தருணத்தில் செயற்படுமாறும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்
மேலும், இது போன்ற (மண்சரிவு போன்ற) இயற்கை நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்வதற்குள்ள அறிவியல் முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த அனர்த்தம் நம் அனைவருக்கும் ஒரு சவாலான நிலைமை என்பதால், நாம் அனைவரும் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தாமல், இந்தச் சந்தர்ப்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் மற்றும் எமது நிறுவனத்தினால் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள தன்னியக்க மழைமானிகள் மூலம் பெறப்படும் நிகழ்நேரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மண்சரிவு முன்னெச்சரிக்கைகளை விடுக்கின்றது.
இந்த முன்னெச்சரிக்கைகள் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே விடுக்கப்படுவதுடன், மழைவீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய உரிய வகையில் புதுக்கப்பிக்கப்படுகின்றன.
மேலும், இந்த முன்னெச்சரிக்கைகள் பிராந்திய மட்டத்தில் விடுக்கப்படுவதுடன், அடையாளம் காணப்பட்ட மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆபத்தான சரிவுகளுக்கு அருகில் வசிக்கும் மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிராந்திய மட்டத்தில் விடுக்கப்படும் முன்னெச்சரிக்கையானது ஒரு முழுப் பிரதேசத்தையும் உள்ளடக்கியதாக விடுக்கப்பட்டாலும், அப்பிரதேசத்தினுள் உள்ள நிலையற்ற இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தே அறிவிக்கப்படுகிறதே தவிர, முழுப் பிரதேசமும் மண்சரிவுக்கு உள்ளாகும் என இதன் மூலம் அர்த்தப்படாது.
இந்தப் பிராந்திய முன்னெச்சரிக்கைகளை விடுக்கும் முறைமையானது, உலகின் ஏனைய நாடுகள் பயன்படுத்தும் நிலையான அறிவியல் முறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இது போன்ற (மண்சரிவு போன்ற) இயற்கை நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்வதற்குள்ள விஞ்ஞான முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த அனர்த்தம் நம் அனைவருக்கும் ஒரு சவாலான நிலைமை என்பதால், நாம் அனைவரும் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தாமல், இந்தச் சந்தர்ப்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.

