Dec 10, 2025 - 06:12 PM -
0
திட்வா புயலுடன் கம்பளை நகரை பாதித்த வெள்ளம் காரணமாக, உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு மேலதிகமாக, கடைகள் மற்றும் களஞ்சியசாலைகளுக்குள் இருந்த பெருமளவான உணவுப் பொருட்களும் அழிவடைந்துள்ளன.
இதற்கமைய, கம்பளை நகரில் உள்ள 2 சிறப்பங்காடி வளாகங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகள் இவ்வாறு அழிவடைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.
இதற்கு மேலதிகமாக பருப்பு, சீனி, மா முதலானவையும் அவற்றில் அடங்குகின்றன.
கம்பளை - நாவலப்பிட்டி வீதியில், கஹட்டபிட்டிய மற்றும் போதலாபிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகள் மற்றும் சிறப்பங்காடி வளாகங்களிலேயே இந்த உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.

