Dec 13, 2025 - 09:53 AM -
0
இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணயனுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் மொத்த பணயனுப்பல் 7.19 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 20.7 சதவீத வளர்ச்சியாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

