Dec 14, 2025 - 12:03 PM -
0
ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.
இந்த படத்திற்கு தயாரிப்பாளர் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கவுள்ளார் என்கிற தகவல்கள் உள்ளது.
இந்த நிலையில் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசாண்ட்ரா இணைந்துள்ளார் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே ரெஜினா கசாண்ட்ரா, அஜித்துடன் இணைந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

