Dec 14, 2025 - 12:07 PM -
0
நடிகை அஞ்சலி ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக அஞ்சலி நடிப்பில் தமிழில் பெரிதாக எந்தவொரு படங்களும் வெளியாகவில்லை.
கடந்தாண்டு ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஞ்சலி புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
செல்வராகவனின் உதவி இயக்குநர் மைக்கேல் என்பவர் இயக்கி வரும் புதிய படத்தில் அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
கடைசியாக 2019ல் 'லிசா' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

