Dec 14, 2025 - 11:31 PM -
0
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள கச்சா எண்ணெய் இறக்கும் மிதவை (Buoy) ஒன்றில் இன்று (14) அதிகாலை ஏற்பட்ட வெடிப்பினால் உருவான எரிபொருள் கசிவு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சுமார் 20 நிமிடங்களுக்கு அண்மித்த காலம் குறித்த கசிவு ஏற்பட்டுள்ளதுடன், அதன் காரணமாக சுமார் 200 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கடல் நீருடன் கலந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் உதவியுடன் கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றி நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

