Dec 15, 2025 - 08:19 AM -
0
தென்னாப்பிரிக்க அணியுடன் நேற்று இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா உலக சாதனைப் படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.
இவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
இதற்கு முன் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
டி-20 கிரிக்கெட்டில் 1,000+ ஓட்டங்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் ஹர்திக் பாண்டியா சொந்தக்காரர் ஆனார்.

