Dec 15, 2025 - 03:07 PM -
0
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார்.
இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார்.
இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
'சிறை' திரைப்படம் வருகிற 25-ம் திகதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் 2-வது சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'மின்னு வட்டம் பூச்சி ' பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், யுவனை தனக்குப் பிடித்த பாடகர் என்று கூறிய ஜஸ்டின், இந்தப் பாடலில் யுவனின் மந்திரம் இருக்கும் என்றார்.
யுவனுடன் சேர்ந்து, ' மின்னு வட்டம் பூச்சி ' பாடலை பத்மஜா பாடியுள்ளார், கார்த்திக் நேதா எழுதியுள்ளார். இந்தப் பாடல் நாளை (16) வெளியாக உள்ளது.

