செய்திகள்
தம்மிக்க ரணதுங்கவுக்கு பிணை - அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

Dec 15, 2025 - 04:14 PM -

0

தம்மிக்க ரணதுங்கவுக்கு பிணை - அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக, முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05