Dec 16, 2025 - 09:30 AM -
0
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி நாளை (17) நடைபெற உள்ளது.
இந்நிலையில் எஞ்சியுள்ள இருபோட்டிகளில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் அக்ஸர் படேல் விலகியுள்ளார்.
உடல்நலக்குறைவால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷபாஸ் அஹ்மட் சேர்க்கப்பட்டுள்ளார்.
தர்மசாலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது காய்ச்சலால் விளையாடாத அக்ஸர் படேல், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அதே காரணத்துக்காக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டுமே குவித்ததால், அக்ஸர் படேல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார்.
இந்நிலையில் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் அக்ஸர் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

