Dec 19, 2025 - 07:10 AM -
0
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஏஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது.
போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 371 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுக்களையும், பிரைடன் கார்ஸ், வில் ஜோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஸ்கோட் போலண்ட், நெதன் லயன் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய நெதன் லயன் மொத்தம் 564 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தை (563) பின்னுக்குத் தள்ளி நெதன் லயன் 2வது இடம் பிடித்தார்.
ஷேன் வோர்னுக்குப் பிறகு டெஸ்ட்டில் அதிக விக்கெட் எடுத்த 2வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

