Dec 19, 2025 - 10:48 AM -
0
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பரிசுத் தொகையை 50 சதவீதத்தால் (50%) அதிகரிப்பதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.
இதன்படி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்காக சாதனை அளவாக 727 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இம்முறை வழங்கப்படவுள்ளன.
இதில் இம்முறை செம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கை ரூபாயில் 1,500 கோடிக்கும் (15 பில்லியன்) அதிகமான பெறுமதியாகும்.
உலகக் கிண்ண கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூலை 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

