Dec 19, 2025 - 10:48 AM -
0
அவதார் சீரிஸில் வெளிவரும் திரைப்படங்களுக்கு உலகளவில் அமோக வரவேற்பு உள்ளது. 2009 இல் வெளிவந்த அவதார் முதல் பாகம் மற்றும் 2022 இல் வெளிவந்த இரண்டாம் பாகம் ஆகிய இரு திரைப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு மிகப்பெரியது.
இதில் 2009 இல் வெளியான அவதார் திரைப்படம்தான் இன்று வரை உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை வைத்துள்ளது. இதனை அவதார் 3 முறியடிக்கும் என தற்போது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அவதார் 3 திரைப்படத்தின் முன்பதிவு மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் நடந்த முன்பதிவில் ரூபா 900 கோடி வசூலித்துள்ளது.
முன்பதிவில் மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை வசூல் செய்துள்ள அவதார் 3 கண்டிப்பாக ரிலீஸுக்கு பின் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

