Dec 19, 2025 - 01:25 PM -
0
Pit Bull, Rottweiler இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து இந்தியாவின் சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாளை (20) முதல் Pit Bull, Rottweiler நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இன்றி சட்டவிரோதமாக Pit Bull, Rottweiler நாய்களை வாங்கி வளர்ப்போருக்கு (இந்திய மதிப்பில்) 1 லட்சம் ரூபா அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே உரிமம் பெற்ற Pit Bull, Rottweiler நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு (இந்திய மதிப்பில்) 5,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

