Dec 19, 2025 - 01:40 PM -
0
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவரில் 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.
கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 101 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 3 ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூ சண்டிகரில் நடந்த 2 ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஆவது போட்டி கடும் பனி காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகள் அணிகள் மோதும் 5 ஆவது டி20 போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் இன்று (19) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
உடல் நலம் சரியில்லாததால் அக்சர் படேல் மற்றும் சுப்மன் கில் விலகியுள்ளனர்.
துடுப்பாட்டத்தில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுகிறார். முதல் 2 ஆட்டத்திலும் சொதப்பிய சுப்மன் கில் 3 ஆவது போட்டியில் சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணி தலைவர் சூர்யகுமார் யாதவ் ஓட்டங்களை எடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும்.

