Dec 19, 2025 - 02:53 PM -
0
நாளை (20) முதல் மலையகப் ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் அம்பேவெலவிற்கு இடையில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயிலவே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, பதுளை ரயில் நிலையத்திலிருந்து மு.ப 9.00 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு ரயில் சேவைகள் அம்பேவெல வரையிலும், அம்பேவெல ரயில் நிலையத்திலிருந்து மு.ப 9.30 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு ரயில் சேவைகள் பதுளை வரையிலும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு (AC) முன்பதிவு ஆசனங்களைக் கொண்ட இரண்டு பெட்டிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு முன்பதிவு ஆசனங்களைக் கொண்ட தலா ஒரு பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும்.
இதேவேளை, கிழக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் திருகோணமலைக்கு இடையிலான ரயில் சேவைகளும் நாளை முதல் இயக்கப்படவுள்ளன.

