Dec 19, 2025 - 04:02 PM -
0
சோமாவதி புனித பூமிக்குச் செல்லும் சுங்காவில பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அந்த வீதியூடான போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று (18) நண்பகல் முதல் இந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று இந்த வீதி மேலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், தற்போது சோமாவதி - சுங்காவில பிரதான வீதி திக்கல பகுதியில் 03 அடிக்கும் அதிக உயரத்தில் நீரில் மூழ்கியுள்ளதாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, சோமாவதி புனித பூமியை தரிசிக்க வரும் பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

