செய்திகள்
ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை

Dec 19, 2025 - 04:46 PM -

0

ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்ற சபா மண்டபத்திற்கு வருகை தந்தார். 

இந்நிலையில் தற்சமயம் பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரையினை நிகழ்த்தி வருகின்றார். 

அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டை நிறைவேற்றிக் கொள்வதற்காக நடைபெறும் விவாதத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் வருகைத் தந்துள்ளார். 

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு இன்று (19) நிறைவேற்றப்படவுள்ளது. 

2026 ஆம் ஆண்டிற்குரிய 500 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த குறைநிரப்பு மதிப்பீட்டை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். 

ஜனாதிபதியின் விசேட உரையினை பார்வையிட,

 

Comments
0

MOST READ
01
02
03
04
05