செய்திகள்
இரத்தினபுரி மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி

Dec 19, 2025 - 05:44 PM -

0

இரத்தினபுரி மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திலுள்ள இரத்தினபுரி மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (19) தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

இந்த வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் இரத்தினபுரி மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. 

சபையின் 27 உறுப்பினர்களும் இன்றைய அமர்வில் கலந்துகொண்டனர். 

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் எல்.பி. லியனாரச்சி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். 

வாக்கெடுப்பைத் தொடர்ந்து கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், மாநகர முதல்வர் வரிகளை அசாதாரணமான முறையில் அதிகரித்தமை காரணமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகத் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05