Dec 19, 2025 - 06:19 PM -
0
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT‑MOBITEL, இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்புப் பயணத்தில் முக்கிய மேம்படுத்தலாக, தனது 5G வலையமைப்பை பொது மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, இலங்கையர்களுக்கு அடுத்த தலைமுறை இணைப்பு வசதிகளையும், ஆற்றலையும் அனுபவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபார வேகம் மற்றும் அதிகுறைந்த தடங்கல்கள் என்பதற்கு அப்பால் SLT-MOBITEL 5G இனால், இலங்கையர்கள் எவ்வாறு பணியாற்றுவது, பயில்வது மற்றும் தமது வாழ்க்கைமுறையை முன்னெடுப்பது எனும் சூழலை மாற்றியமைக்கும். கல்வி, சுகாதார பராமரிப்பு, உற்பத்தி மற்றும் புத்தாக்கம் ஆகிய பிரதான துறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் தன்மையை தொழில்னுட்பம் கொண்டுள்ளது. டிஜிட்டல் உள்ளடக்கத்தை துரிதப்படுத்துவது மற்றும் நிறுவனங்களுக்கு வலுவூட்டுவதனூடாக SLT- MOBITEL 5G இனால், எதிர்காலத்துக்கு தயாராக இருப்பது, அறிவினால் இயக்கப்படும் பொருளாதாரம் போன்றவற்றுக்கு அடித்தளம் இடப்பட்டு, சர்வதேச டிஜிட்டல் தளத்தில் இலங்கையை போட்டியிடக்கூடிய நிலைக்கு உயர்த்தும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயத்தின் அங்கமாக, கொழும்பு One Galle Face Mall (OGF) இல் 5G செயன்முறை அனுபவ வசதியை SLT-MOBITEL ஏற்படுத்தியிருந்தது. இதில் பொது மக்களுக்கு 5G அனுபவத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடிந்ததுடன், அதில் காணப்படும் வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடிந்தது. OGF இல் நிறுவப்பட்டிருந்த SLT-MOBITEL 5G அனுபவப் பகுதிக்கு விஜயம் செய்து augmented (AR) மற்றும் virtual reality (VR) அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது, நிஜ-நேர கேமிங் மற்றும் நேரடியான வேகங்கள் பற்றிய தெளிவுபடுத்தல்கள் போன்றன விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டு 5G இன் ஆற்றல் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது. நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர். எரங்க வீரரட்ன, அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, SLT குரூப் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா, SLT-MOBITEL பணிப்பாளர்கள், SLT குரூபட பிரதம நிறைவேற்று அதிகாரி இமந்த விஜேகோன், மொபிடெல் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்ஷன கீகனகே மற்றும் SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மைல்கல் அறிமுகம் தொடர்பாக சுதர்ஷன கீகனகே கருத்துத் தெரிவிக்கையில், “5G என்பது துறைகளில் டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த செயற்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. இலங்கையை உள்ளடக்கமான, நிலைபேறான மற்றும் அர்த்தமுள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய தலைமுறை இணைப்புத்திறனினுள் கொண்டு சென்று ஒவ்வொரு குடிமகனுக்கும் பயன் பெறக்கூடிய வகையில் அமைந்திருக்கும் தன்மையை கொண்டுள்ளது. பொது மக்களுக்கு 5G ஐ பெற்றுக் கொள்ளச் செய்வதனூடாக, வியாபாரங்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டி, தொழில்னுட்பம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க கைகொடுப்பதாக SLT-MOBITEL அமைந்துள்ளது.” என்றார்.
இந்த அனுபவபூர்வமான முன்முயற்சியானது, இலங்கை முழுவதும் உள்ள மக்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு செல்வதற்கும், மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள் மூலம் சமூகங்கள் பயனடைய உதவுவதற்கும், அதிநவீன தொழில்நுட்பங்களை அனைவருக்கும் சமமாகக் கிடைக்கச் செய்வதற்கும் SLT-MOBITEL கொண்டுள்ள உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. மேம்பட்ட மொபைல் மற்றும் நிலையான வலையமைப்பு தொழில்நுட்பங்களுக்குத் தேவையான வலையமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவது உட்பட, 5G சேவையை நிலைநிறுத்துவதற்கான அடிப்படைப் பணிகளை SLT-MOBITEL பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், நவீன உட்கட்டமைப்புகள், உயர் கொள்ளளவுடைய ஃபைபர் தடங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட வயர்லெஸ் வலையமைப்புகள் போன்றன இலங்கையில் 5G ஐ பரந்தளவில் பெற்றுக் கொடுப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த முயற்சிகள் நாட்டின் டிஜிட்டல் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவளிப்பதுடன், தொழிற்துறைகள், வியாபாரங்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இன்று இலங்கை முழுவதும் 5Gஐ பொதுமக்கள் அணுகக்கூடியதாக மாற்றி குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள SLT-MOBITEL, 5Gஇன் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் மூலம் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இது பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பிரஜைகள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை நேரடியாக அனுபவிக்க உதவுகிறது. SLT-MOBITEL, இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அடைய வழிகாட்டி, ஆதரவளித்த இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கும் (TRCSL) தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கையை அடுத்த தலைமுறை இணைப்புத்திறன் மற்றும் டிஜிட்டல் மேம்படுத்தலை நோக்கி கொண்டு செல்லும் SLT-MOBITEL இன் நோக்கத்துடன் பொருந்தும் வகையில் 5G சேவைகள் பொது மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அமைந்துள்ளது. உறுதியான வலையமைப்பு, புத்தாக்கம் மற்றும் நாடளாவிய சேவை விநியோகம் ஆகியவற்றுடன், 5G வலையமைப்பின் அனுகூலம் அனைத்து இலங்கையர்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

