Dec 19, 2025 - 07:04 PM -
0
பாராளுமன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய போசனத்திற்கு போதியளவான உணவு வகைகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் தொனியில் சபையில் இன்று குற்றஞ்சாட்டினார்.
மதிய போசனத்திற்காக தாம் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற போது, அங்கு சிவப்பரிசியும், சொதியும் மாத்திரமே இருந்ததாக கவலைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற நிர்வாகக் குழுவின் மீது இதன்போது தமது அதிருப்தியையும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வௌிப்படுத்தினார்.
அவரது இந்த முறைப்பாட்டை சபாநாயகருக்கு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டது.

