செய்திகள்
மகாவலி கங்கையின் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Dec 19, 2025 - 07:30 PM -

0

மகாவலி கங்கையின் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

மகாவலி கங்கை வடிநிலத்திற்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி, இந்த வௌ்ள அபாய முன் எச்சரிக்கை நாளை (20) மாலை 5.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாவலி கங்கையின் சில நீரேந்து பகுதிகளில் பெய்த மழை மற்றும் மேல்ப் பகுதியிலுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறந்து விடப்பட்டமை காரணமாகச் சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நேற்று (18) அறிவிக்கப்பட்டிருந்தது. 

கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்தை, லங்காபுர, தமன்கடுவை, திம்புலாகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன் மட்டக்களப்பு - பொலன்னறுவை வீதி கல்லேல்ல பகுதியிலும், சோமாவதி ரஜமகா விகாரைக்கான பிரவேச வீதி மற்றும் விகாரையைச் சூழவுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, அடுத்த சில நாட்களுக்குச் சோமாவதி ரஜமகா விகாரைக்குச் செல்லும் பக்தர்களும், அந்தப் பகுதிகளில் மகாவலி கங்கையை அண்டி வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05