Dec 20, 2025 - 08:18 AM -
0
சர்வதேச டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் மும்பையில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
10 வது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 8-ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியாவுடன், பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்திய குழாமை தெரிவு செய்வதற்காக தெரிவுக் குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தலைவர் சூர்யகுமார் யாதவும் அணித் தேர்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தமது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பெப்ரவரி 7 ஆம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது.
அதேநேரம் பாகிஸ்தானை பெப்ரவரி .15 ஆம் திகதி கொழும்பில் சந்திக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரை வென்ற பின்னர் இந்திய அணி எந்த ஒரு டி20 தொடரையும் இழந்ததில்லை.
ஆசிய கிண்ணம் உட்பட தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றி இருக்கிறது.
தற்போதைய டி20 அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை.
எவ்வாறாயினும் சுப்மன் கில்லுக்கு இடம் வழங்கப்படுமா என்பதில் கேள்வி ஏற்பட்டுள்ளது.
அவரது இடத்துக்கு ஜெய்ஸ்வால் அல்லது சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 45 பந்தில் சதம் விளாசிய இஷான் கிஷன் ஆகியோரின் பெயர் பரிசீலிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

