Dec 20, 2025 - 08:39 AM -
0
60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை, வேகட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

