Dec 20, 2025 - 10:33 AM -
0
'டித்வா' புயல் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை - அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று (20) முற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இதன் ஆரம்ப பயணத்தை குறிக்கும் வகையில், இன்று காலை 8.00 மணிக்கு 'Class S14' வலுச்சக்தி தொகுதியைக் கொண்ட பதுளை - அம்பேவெல விசேட 'உடரட்ட மெனிகே' புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்தது.
'டித்வா' அனர்த்தம் ஏற்பட்டு 23 நாட்களுக்குப் பின்னரே மலையக பாதையில் இவ்வாறான ஒரு புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
இதன்படி, இன்று முதல் மலையக ரயில் மார்க்கத்தில் பதுளை - அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

