Dec 20, 2025 - 11:05 AM -
0
பாகிஸ்தானில் இன்று (20) காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடல் மட்டத்திற்கு 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

