Dec 21, 2025 - 08:44 AM -
0
உலகப்புகழ் பெற்ற கவித்துவக் கலைஞர் அருள்பரன் வாகீஸ்பரனைக் கௌரவிக்கும் விழா நேற்று (20) மாலை இணுவில் அறிவாலயத்தில், இணுவில் கலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து வாகீஸ்பரன், அவரது பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
இதன்போது, இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து வாகீஸ்பரனுக்கு வேல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து இணுவில் அறிவாலயத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.
குறித்த கௌரவிப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
--

