Dec 21, 2025 - 08:57 AM -
0
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (20) காலை வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தேகம, தம்முன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய ஆண் குழந்தையாகும்.
சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

