Dec 21, 2025 - 10:02 AM -
0
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 82 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 371 ஓட்டங்களைக் குவித்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 349 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதற்கமைய இங்கிலாந்து அணிக்கு 435 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
குறித்த வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 352 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியதுடன், தொடரையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.

