Dec 21, 2025 - 02:42 PM -
0
கரந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3-ம் கட்டை பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தொகையொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
எல்பிட்டிய பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கரந்தெனிய, 3-ம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய "வீரே" என அழைக்கப்படும் நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் அளவு மற்றும் அதன் பெறுமதி எவ்வளவு என்பது குறித்து தொடர்ந்தும் கணக்கிடப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

