செய்திகள்
ஐந்து மீனவர்களுடன் படகொன்று மாயம்!

Dec 21, 2025 - 03:41 PM -

0

ஐந்து மீனவர்களுடன் படகொன்று மாயம்!

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது. 

'இதுரங்கி 1' எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. 

அந்த படகில் 5 மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த படகு கடந்த நவம்பர் 21 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அந்த படகிலிருந்த ஐந்து மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு ஒன்று வந்ததாகவும், அன்று முதல் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05