செய்திகள்
இளையோர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்

Dec 21, 2025 - 05:23 PM -

0

இளையோர் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்

19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. 

இந்த போட்டி தொடர் டுபாயில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (21) இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது. 

இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இளையோர் அணிகள் மோதியிருந்தன. 

குறித்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை குவித்தது. 

அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அதிரடியாக பெற்றார். 

இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதனையடுத்து 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 26.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

இதன்மூலம் 12வது ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் இளையோர் அணி சவீகரித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05