Dec 22, 2025 - 03:53 PM -
0
உலகளாவிய அளவில் சைபர் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் உள்ள பயனர்களுக்கு உள்ளூர் தீங்கிழைக்கும் மென்பொருள் தொற்றுகள் இன்னும் நிலைத்திருக்கும் அபாயமாகவே இருப்பதை புதிய தரவுகள் வெளிப்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அன்றாடம் சராசரியாக அரை மில்லியன் தீங்கிழைக்கும் கோப்புகளை கண்டறிந்ததாக Kasperskyதெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், இணையத்துடன் தொடர்பில்லாத (ஆஃப்லைன்) தொற்று வழிகள் பிராந்திய அச்சுறுத்தல் சூழலில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றன.
Kaspersky பாதுகாப்பு வலையமைப்பு (KSN) தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், இலங்கையில் உள்ள KSN பயனர்களின் கணினிகளில் 3,938,281 உள்ளூர் தீங்கிழைக்கும் மென்பொருள் சம்பவங்களை Kaspersky கண்டறிந்துள்ளது. இந்த காலப்பகுதியில், நாட்டின் 23.2% பயனர்கள் உள்ளூர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர். இதனால், உள்ளூர் தொற்று வழிகளின் மூலம் பரவும் தீங்கிழைக்கும் மென்பொருளினால் பாதிப்புக்கு உள்ளான பயனர்களின் அளவின் அடிப்படையில் இலங்கை உலகளவில் 53வது இடத்தைப் பெற்றுள்ளது.
உள்ளூர் அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் புழுக்கள் (worms) மற்றும் கோப்பு வைரஸ்களை உள்ளடக்குகின்றன. இவை USB டிரைவ்கள், CDக்கள், DVDக்கள் போன்ற அகற்றக்கூடிய ஊடகங்கள் மற்றும் பிற ஆஃப்லைன் முறைகள் மூலம் பயனர்களை பாதிக்கும் முக்கியமான தீங்கிழைக்கும் மென்பொருள் வகைகளாகத் தொடர்ந்து காணப்படுகின்றன. இந்தத் தொற்றுகள், இணையச் சூழலுக்கு வெளியே பரவும் தீங்கிழைக்கும் மென்பொருள் எவ்வளவு அடிக்கடி பயனர்களை குறிவைக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன; பெரும்பாலும் பகிரப்பட்ட அல்லது எடுத்துச் செல்லக்கூடிய சாதனங்கள் மூலமாகவே இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இணையத்தை சார்ந்த சுரண்டல்கள் அல்லது சமூக பொறியியல் முறைகளில் நம்பிக்கை வைக்கும்இணையத்தள அச்சுறுத்தல்களிலிருந்து மாறுபட்டு, உள்ளூர் அச்சுறுத்தல்கள் உடல் நெருக்கம் மற்றும் சாதனப் பகிர்வை பயன்படுத்தி தீங்கிழைக்கும் குறியீடுகளைப் பரப்புகின்றன.
இந்த உள்ளூர் தொற்று அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது, பாரம்பரிய கணினி வைரஸ்கள் திறன்களைக் கொண்டிருப்பதிலேயே முடிவடைவதில்லை. பயனுள்ள பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த ஃபயர்வால்கள், ஆன்டி-ரூட்கிட் தொழில்நுட்பங்கள் மற்றும் அகற்றக்கூடிய சாதனங்களின் பயன்பாட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் ஆகியவை அவசியமாகின்றன. இந்த பாதுகாப்பு அடுக்குகள், ஆஃப்லைன் ஊடகங்கள் மூலம் பரவும் தீங்கிழைக்கும் மென்பொருள்களைக் கண்டறிந்து, கட்டுப்படுத்தி, பரவுவதைத் தடுப்பதுடன், பாதுகாப்பு பாதிக்கப்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.இலங்கையில் உள்ள Kasperskyயின் பாதுகாப்பு வலையமைப்புத் தரவுகள், குறிப்பாக பகிர்ந்து பயன்படுத்தப்படும் அகற்றக்கூடிய ஊடகங்கள் பொதுவாக காணப்படும் சூழல்களில், உள்ளூர் தொற்றுகள் இன்னும் தொடர்ச்சியான சவாலாகவே இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. எனவே, பயனர்கள் மற்றும் நிறுவனங்கள், ஊடகங்களால் ஏற்படும் அபாயங்களை கட்டுப்படுத்தும் வகையில், எண்ட்பாயிண்ட் பாதுகாப்புடன் (endpoint protection) இணைந்த சாதன முகாமைத்துவக் (device management) கொள்கைகளை உள்ளடக்கிய முழுமையான சைபர் பாதுகாப்பு அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்றைய அச்சுறுத்தல் நிலப்பரப்பு எவ்வளவு பெரியதாக மாறியுள்ளது என்பதை உலகளாவிய புள்ளி விவரங்கள் வெளிப்படுத்தினாலும், உள்ளூர் தொற்று திசையன்கள் குறிப்பாக இயற்பியல் தரவு பரிமாற்ற முறைகள் பரவலாக இருக்கும் பகுதிகளில் ஒரு முக்கிய பகுதியாகவே உள்ளன, , என்று Kasperskyயின் ஆசிய பசிபிக்முகாமைத்துவப்பணிப்பாளர் அட்ரியன் ஹியா கூறினார். இந்த அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடவும், தமது வலையமைப்புகளைப் பாதுகாக்கவும், வைரஸ் தடுப்பு, ஃபயர்வால் மற்றும் சாதனக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல அடுக்கு பாதுகாப்பு உத்திகளை நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்.
உலகளவில், உள்ளூர் அச்சுறுத்தல்களால் தாக்கப்படும் பயனர்களின் அதிக சதவீதத்தைக் கொண்ட நாடுகளில் துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமன் ஆகியவை அடங்கும், அங்கு தொற்று வீதங்கள் 30% ஐ விட அதிகமாக உள்ளன. இலங்கை உலகளவில் 53வது இடத்தில் இருந்தாலும், உள்ளூர் தீங்கு பயக்கும் மென்பொருள் சம்பவங்களின் அதிகரித்து வரும் அளவு தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான நினைவூட்டலாக செயல்படுகிறது.
இலங்கை தனது டிஜிட்டல் அடையாளத்தை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அச்சுறுத்தல் சூழலும் மாற்றமடைந்து, வலுவான சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியமாக்குகிறது. Kaspersky, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இருவகை அச்சுறுத்தல்களிலிருந்தும் பயனர்களை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பல்வேறு தீர்வுகளை வழங்குகிறது. இதன் மூலம், வீடுகளிலும் பணியிடங்களிலும் தொழில்நுட்பத்தை மேலும் பாதுகாப்பாக பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகிறது.

