Dec 22, 2025 - 04:57 PM -
0
பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிளை பிணையில் செல்ல எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், எம்பிலிபிட்டிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றவியல் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

