செய்திகள்
எல்ல சம்பவம் - 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

Dec 22, 2025 - 05:50 PM -

0

எல்ல சம்பவம் - 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

எல்ல சுற்றுலா வலயத்திற்கு வெளியிலிருந்து வரும் வாடகை வாகன சாரதிகளுக்கும், அப்பிரதேசத்தில் தொழில் புரியும் வாடகை வாகன சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் வௌியான வீடியோ தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

சமூக ஊடகங்களில் பரவும் அந்த வீடியோவில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதேசத்தில் வாகனம் செலுத்துவது தொடர்பில் சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கும் விதம் காணப்படுகிறது. 

எவ்வாறாயினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டு, எல்ல பொலிஸ் நிலையத்திலிருந்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ