Dec 23, 2025 - 10:05 AM -
0
நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவின் 'பிரஜா சக்தி' குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும், பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப விழா நேற்று (22) டிக்கோயா நகர மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் ஆகியோரின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 35 கிராம நிலதாரி பிரிவுகளின் 'பிரஜா சக்தி' குழுத் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
பிரதேச மட்டத்தில் மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதே இக்குழுக்களின் முதன்மை நோக்கமாகும்.
--

