Dec 23, 2025 - 11:52 AM -
0
நுகேகொடை பகுதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் அத தெரணவுக்கு கிடைத்துள்ளன.
முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் பின்தொடர்ந்து செல்வது அதில் தெரியவந்துள்ளது.
தெஹிவளை, போதியவத்த, ஸ்ரீ சரணங்கர வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
கல்கிசை குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கொஹுவலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

