சினிமா
ஜனநாயகன் உடன் மோதல் உறுதியானது!

Dec 23, 2025 - 12:08 PM -

0

ஜனநாயகன் உடன் மோதல் உறுதியானது!

சிவகார்திகேயனின் பராசக்தி படம் ஜனவரி 14 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது மாற்றப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல் வந்தது. ஜனவரி 10 ஆம் திகதி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்பட்டது. 

சுதா கொங்கரா இயக்கி இருக்கும் இந்த படத்தில் சிவகார்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் Dawn Pictures புது ரிலீஸ் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

ஜனவரி 10 ஆம் திகதி பராசக்தி ரிலீஸ் ஆக இருப்பதாக புது வீடியோ உடன் அறிவித்து இருக்கின்றனர். 

விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் நிலையில் அதற்கு மறுநாள் பராசக்தி திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05