Dec 23, 2025 - 12:30 PM -
0
கர்நாடக அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் 37 வயதான கிருஷ்ணப்பா கவுதம் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக பெங்களூருவில் நேற்று (22) அறிவித்தார். சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான கவுதம் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி ஒன்றிலும் விளையாடியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 2 ஓட்டங்களையும், ஒரு விக்கெட்டும் எடுத்தார். 59 முதல்தர போட்டிகளில் ஆடி 224 விக்கெட்டுகளுடன், ஒரு சதம் உள்பட 1,419 ஓட்டங்களையும் சேர்த்துள்ளார். இதே போல் 68 லிஸ்ட் 'ஏ' ஒரு நாள் போட்டியில் விளையாடி 96 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப், சென்னை, மும்பை, லக்னோ, ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஐ.பி.எல்.-க்கு முன்பாக அவரை ஏலத்தில் 9¼ கோடி ரூபாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

