Dec 23, 2025 - 01:02 PM -
0
Kapruka Holdings நிறுவனம் செப்தம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில் கனிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025 நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட தவிசாளர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியின் மீளாய்விலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதிக்கு நிகராக குழுமத்தின் வருமானம் 12% வளர்ச்சியை அடைந்துள்ளதோடு நிறுவனத்தின் மொத்த இலாபம் 19% ஆல் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கு நிகராக நிறுவனத்தின் தொழிற்பாட்டுச் செயலாற்றுகை 77% ஆல் அதிகரித்துள்ளமை தனித்துவமானதொரு மைல்கல்லாகும். அதன் மூலம் Kapruka Holdings நிறுவனம் மக்கள் மத்தியில் எந்த அளவு பிரபல்யமடைந்துள்ளதென்பது மேலும் உறுதியாகியுள்ளது. 2025 ஜுன் 30 ஆம் திகதி நிறைவடைந்த காலாண்டிலும் நிறுவனம் சிறந்த தொழிற்பாட்டுச் செயலாற்றுகையை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலாண்டுக்குரிய வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய காரணியாக Kapruka Partner Central ஐ குறிப்பிட முடியும்.
தொடக்கத்தில் சம்பிரதாய பொருள் விபர பட்டியல்களை (Inventory) அடிப்படையாக கொண்ட இலத்திரனியல் சந்தைப்படுத்தல் தளமாக விளங்கிய Kapruka தற்பொழுது நவீனத்துக்கேற்ப இற்றைப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் தளமாக வளர்ச்சி அடைந்துள்ளது. துரிதமாக வளர்ச்சி அடைந்து வரும் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகநாமங்களுடன் இணைந்துள்ள இந் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பரப்பிலான உற்பத்தித் தொகுதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் மூலதன வினைத்திறனும் வளர்ச்சி அடையும்.
Kapruka Partner Central ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அன்றாடம் பல்வேறு சேவைகளை இணையவழி மூலம் கொள்வனவு செய்யவும் முன் பதிவு செய்யவும் முடியும். அதன் பொருட்டு நம்பகரமான சேவை வழங்குநர்களுடன் இணைந்துள்ள இந் நிறுவனம் அதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் வசதிகள் தொடர்பாக கொண்டுள்ள அர்ப்பணிப்பு என்ன என்பதை மீண்டுமொரு நிரூபித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் Amazon, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற முன்னணி சர்வதேச வணிகத் தளங்களுக்கு இலங்கை வர்த்தகநாமங்கள் பலவற்றின் இலத்திரனியல் விநியோகஸ்தரராக விளங்கும் Kapruka அதன் மூலம் நாட்டின் அந்நியச் செலவாணியை உயரத்துவதிலும் பங்களிப்புச் செய்து வருகிறது. நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான திரு துலித் ஹேரத் கருத்து தெரிவிக்கையில் “77% தொழிற்பாட்டுச் செயலாற்றுகை வளர்ச்சி என்பது தனித்துவமானதொரு வெற்றியாகும். Partner Central ஊடாக வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர் வர்த்தகநாமங்களுக்கும் பங்களாளர்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத் தர எம்மால் முடிந்துள்ளது.” என்றார்.
நாட்டின் மேலான நம்பகரமான டிஜிட்டல் சேவைத் தளத்தை உருவாக்குவதற்கான Kapruka நிறுவனத்தின் நீண்ட கால நோக்கத்தின் முதன்மையான மூலோபாயமாக Partner Central ஐ குறிப்பிட முடியும்.

