செய்திகள்
ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் நிறைவு

Dec 23, 2025 - 09:05 PM -

0

 ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் நிறைவு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, இன்று மாலை இந்தியாவிலுள்ள புதுடெல்லிக்குச் செல்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 

அவர் நேற்று (22) இலங்கைக்கு வருகை தந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானத்திலேயே இவ்வாறு பயணமானார். 

அவர் நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரச தலைவர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். 

ஜெய்சங்கர் அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05