செய்திகள்
ராகமவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு

Dec 24, 2025 - 07:19 AM -

0

ராகமவில் டி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு

ராகம பொலிஸாரினால் டி-56 ரக துப்பாக்கி ஒன்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

 

நேற்று (23) இரவு ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த  இடத்தில் காணப்பட்ட மோட்டார் ரக வாகனமொன்றை ராகம பொலிஸார் சோதனையிட்டனர். 

 

இதன்போது, குறித்த வாகனத்திற்குள் இருந்து இந்தத் துப்பாக்கியும், தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு மெகசின்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

 

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வாகனத்தை அந்த இடத்திலேயே கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05