Dec 24, 2025 - 07:25 AM -
0
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்தார்.
இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
ரயில் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

