உலகம்
விமான விபத்து: லிபிய இராணுவத் தளபதி உள்ளிட்ட 8 பேர் உயிரிழப்பு

Dec 24, 2025 - 10:22 AM -

0

விமான விபத்து: லிபிய இராணுவத் தளபதி உள்ளிட்ட 8 பேர் உயிரிழப்பு

லிபிய இராணுவத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹடாட், துருக்கியின் அங்காரா நகருக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். 

இராணுவத் தளபதி, நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் என மொத்தம் எட்டுப் பேருடன் பயணித்த தனியார் ஜெட் விமானம், அங்காராவிலிருந்து லிபியாவின் திரிபோலி நோக்கிப் பறந்துகொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, விமானத்தின் எரிபொருளை வெளியேற்றிவிட்டு அவசரமாகத் தரையிறக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர். எனினும், தரையிறங்குவதற்கு முன்னரே விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காகவே இராணுவத் தளபதி துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

அல்-ஹடாட்டின் மறைவையொட்டி லிபிய அரசாங்கம் மூன்று நாள் துக்க காலத்தை அறிவித்துள்ளது. அவரது மறைவு நாட்டுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு என லிபிய அரசு தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05