Dec 24, 2025 - 11:18 AM -
0
டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபா எனப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
கடந்த 9 ஆம் திகதி கந்தர பிரதேசத்திலிருந்து 5 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற குறித்த மீன்பிடிப் படகு, போதைப்பொருளைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த போதே நேற்று (23) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இன்று காலை 6 மணியளவில் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட இப்படகிலிருந்து, 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 11 பைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

